அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கினர். அதிகபட்ச தண்டனை விதித்ததற்கான காரணத்தை விசாரணை நீதிமன்ற நீதிபதி கூறவில்லை. ராகுல் மீதான தண்டனை தீர்ப்பு என குஜராத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஏற்படுத்தும் விளைவு பாரதூரமானது.ராகுல் வழக்கில் குஜராத் நீதிமன்ற தீர்ப்பு வயநாடு தொகுதி மக்களின் உரிமையை பாதிக்கக்கூடியதாகும். ஒரு நாள் சிறை தண்டனை குறைவாக வழங்கப்பட்டிருந்தாலும் ராகுலின் எம்.பி. பதவி பறிபோய் இருக்காது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை ஏற்கனவே குஜராத் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இதனிடையே அவர் தனது டிவீட்டர் பக்கத்தில் கூறியதாவது, எது வந்தாலும் எனது கடமை அப்படியே தொடரும் என்று உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ராகுல் காந்தி டிவீட் செய்தார். இந்தியா என்பதன் உண்மைத் தன்மையை பாதுகாப்போம். 2 ஆண்டு சிறை தண்டனை வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஏதுவாக இருப்பினும் உண்மை வெல்லும். நான் என்ன செய்ய வேண்டும், எனது வேலை என்ன என்பது என் மனதில் தெளிவாக இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

