சென்னைக்கு மீண்டும் வருகிறது டவுள் டெக்கர் பேருந்து; சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

சென்னை மாநகரில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள் கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மாடிப் பேருந்து என்று அழைக்கப்பட்ட டபுள் டெக்கர் பேருந்துகள் 1997 முதல் 2008ஆம் ஆண்டு வரை சென்னை சாலைகளில் வலம் வந்தன. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் இந்த சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகளை மீண்டும் இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.
மின் கம்பிகள் இல்லாத, தாழ்வான மரங்கள் இல்லாத சாலைகளான அண்ணா சாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் இந்த டபுள் டெக்கர் பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.