நடிகர் விஜயின் மகன் கோலிவுட்டின் புதிய இயக்குநராகிறார்; லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் திரைக்கதை எழுதுவது குறித்து படித்துவந்ததார். சில குறும்படங்களையும் அவர் இயக்கினார். இந்த நிலையில் தமிழில் திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.
ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *