ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளில் அவர் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படையப்பா திரைப்படம் 26 வருடங்கள் கழித்து புது பொலிவுடன் திரையில் மீண்டும் இன்று வெளியாகியுள்ளது. ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் படையப்பா படத்துடன் கொண்டாடி வருகின்றனர். படையப்பா படத்தை திரையில் பார்த் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
1999ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர்ஹிட்டான இப்படத்தை 26 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடு செய்துள்ளனர். இந்த நிலையில், ப்ரீ புக்கிங்கில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது விஜய்யின் கில்லி பட வசூலையும் ஓரங்கட்டும் வகையில் ரஜினியின் படையப்பா பட கலெக்ஷன் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ப்ரீ புக்கிங்கில் ரிலீஸ் முன்பே அதிக டிக்கெட் விற்பனையானது படையப்பா படத்திற்காக தான் என ரோஹினி திரையரங்க பக்கத்தில் அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது ரஜினியின் படையப்பா படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 2 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

