திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு; வெள்ள பாதிப்பு காரணமாக ஒத்திவைப்பு என அறிக்கை

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

சேலத்தில் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை வெள்ளத்தால் ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பால் மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு தான் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால் அங்குள்ள முக்கிய இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். பஸ் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முடங்கிய நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள் வெள்ள பாதிப்பு காரணமாக மீண்டும் சேலத்தில் நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *