பொங்கலை ஒட்டி இன்று தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் வெளியாக உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாவது வழக்கம்.
கடந்தாண்டு விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு உள்ளிட்ட படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின. ஆனால் இந்தாண்டு உச்ச நட்சத்திரங்களின் எந்த படமும் வெளியாகவில்லை.
வித்தியாசமான கதைக்களம், நட்சத்திர பட்டாளம் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய கேப்டன் மில்லர் அதை நிறைவேற்றியுள்ளது. இன்று காலை திரையரங்குகளில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஏலியன் கான்செப்டை அடிப்படையாக வைத்து குழந்தைகளை கவரும் வகையில்
அயலான் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

