அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா; 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ள பிரதமர் மோடி

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் செய்திகள் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

அயோத்தி ராமர் கோயில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற உள்ள நிலையில், அதற்காக 11 நாட்கள் விரதத்தை தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் வருகிற 22-ந்தேதி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில், 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி தனது X தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு தனது யூ டியூப் பக்கத்தில் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
தனது யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆடியோவில் பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது:
அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கு இன்னும் 11 நாட்கள் உள்ளன. இந்த புனிதமான விழாவில் நான் இருப்பது அதிர்ஷ்டம். இந்த விழாவின்போது நாட்டின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த கடவுள் என்னை உருவாக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *