நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு; மத்திய அரசு அறிவிப்பு, இன்று நள்ளிரவு முதல் அமல்

அரசியல் இந்தியா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 குறைத்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடும்பங்களின் நலன் மற்றும் வசதி ஆகியவை தனது இலக்கு என்பதை மற்றொறு முறை நிரூபித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சமையல் எரிவாயுவின் விலை ரூ.100 குறைக்கப்பட்டது.
இவையெல்லாம் நாடு எதிர்கொள்ளவுள்ள மக்களவை தேர்தலையொட்டிய நடவடிக்கைகளென விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *