கர்நாடகாவில் உள்ள கோயில்களில் அரசின் தயாரிப்பான நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் பிரசாதம் தயாரித்தல், விளக்குகள் ஏற்றுதல் உள்ளிட்ட அனைத்து சடங்கு சம்பிரதாயங்களுக்கும் நந்தினி நெய்யைப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் உள்ள 1,80,000 கோயில்களில் 35,500 கோயில்கள் கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கர்நாடக அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களில் உள்ள அனைத்து கோயில்களிலும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கோயிலில் அரசின் தயாரிப்பான நந்தினி நெய் மட்டும் உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

