அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி, தனது பிறந்த நாளை இரண்டாவது முறையாக விண்வெளியில் கொண்டாடியுள்ளார். பூமிக்கு திரும்ப முடியாத காரணத்தால், அவர் தனது 59வது பிறந்த நாளை விண்வெளியில் கொண்டாடுகிறார். 2012-ஆம் ஆண்டில், சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு சென்ற போது, அவர் அங்கு தனது பிறந்த நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஸ்டார்லினர் விண்கலம், அதில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன், கடந்த ஜூன் 5-ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர் . ஒன்பது நாட்கள் அந்த நிலையத்தில் தங்கிய பிறகு, அவர்கள் பூமிக்கு திரும்பும் திட்டம் இருந்தது ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, அவர்கள் திட்டமிட்டபடி திரும்ப முடியவில்லை. அவர்கள் பூமி திரும்ப வரும் பிப்ரவரி மாதம் ஆகக்கூடும் என கூறுகின்றனர். இந்நிலையில் அவர் தனது 59வது பிறந்த நாளை விண்வெளியில் கொண்டாடினார். சுனிதா வில்லியம்ஸ் பூமியில் இல்லாத போதிலும், பல பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் மக்கள் அவருக்கு தங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

