இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாகஅறிவித்திருந்தனர், இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் ரன்களை குவிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டனர்.ஆனால், இருவரும் குறைந்த ரன்களில் ஆட்டத்தை இழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். விராட் கோலி இந்த போட்டியில் குறைந்த ரன்கள் எடுத்த போதிலும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். சொந்த மண்ணில் குறைவான போட்டிகளில் 12,000 ரன்களை அடித்த முதல் வீரராக விராட் கோலி மாறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது புதிய சாதனையாகும். முன்னதாக கிரிக்கெட் ஜாபவான் சச்சின் டெண்டுல்கர் 267 இன்னிங்சில் 12,000 ரன்கள் எடுத்திருந்தார். அதுவே சொந்த நாட்டில் குறைந்த போட்டிகளில் 12,000 ரன்கள் அடைந்த சாதனையாக இருந்தது. ஆனால், விராட் கோலி 250 போட்டிகளுக்கு குறைவான இன்னிங்ஸில் சச்சினின் சாதனையை முறியடித்து கோலி கிரிக்கெட் உலகில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். சொந்த மண்ணில் 12,000 ரன் கடந்தவர்கள் இதில் கோலி250 இன்னிங்ஸில், சச்சின் 269 , சங்ககரா 271, ஜேக்காலீஸ் 275 மற்றும் ரிக்கி பாண்டிங் 275 இன்னிங்ஸில் ரன்கள் எடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் டாப் 5 இடங்களில் உள்ளனர்.