கடந்த 2004-ம் ஆண்டு தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து மத்திய அரசால் வழங்கப்பட்டது. அதன் பிறகு 2014-ம் ஆண்டு ஒடிசா மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஒடிசா ஆகிய ஆறு இந்திய மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றன. தற்போது, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பெங்காலி, பாலி, அசாமி மற்றும் பராகீர்தம் ஆகிய ஐந்து மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.பல ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆறு இந்திய மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள நிலையில், தற்போது இந்தியாவில் மேலும் 5 புதிய மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றதால், செம்மொழிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

