பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகளான சங்கமித்ரா அன்புமணி தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் பேத்தியாக பெருமையுடன், இவர் அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது திரைத்துறையில் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இவரது படத்தை உறுமீன் படத்தை இயக்கிய இயக்குநர் இயக்கவுள்ளார்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள்கள் சங்கமித்ரா, சம்யுக்தா மற்றும் சஞ்சுத்ரா . கடந்த லோக்சபா தேர்தலில் சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியுற்றார். இந்த தேர்தலில் சௌமியாவிற்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் அனைவரும் செயல்பட்டனர், குறிப்பாக அவரது மூன்று மகள்களும் தேர்தல் பிரசாரத்தில் சிறப்பாக ஈடுபட்டனர். இந்நிலையில் தயாரிப்பாளரான , தமிழக கேரள எல்லையுடன் தொடர்புடைய உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படத்தை தயாரித்து வருகிறார். “அலங்கு” என படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது . இந்த படத்தை இயக்கும் எஸ்பி சக்திவேல், உறுமீன் மற்றும் பயணிகள் கவனிக்கவும் போன்ற படங்களில் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில், மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கோலி சோடா 2 மற்றும் விக்ரம் போன்ற படங்களை தொடர்ந்து, இது கோலிவுட்டில் அவரது அடுத்த படமாகும். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த புதிய படத்தில், செம்பன் வினோத்துடன் காளி வெங்கட், குணாநிதி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

