மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடும், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் தேர்தலைச் சந்தித்தன.
பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 187 இடங்களில் வெற்றி, 48 இடங்களில் முன்னிலை என 235 இடங்களை தன் வசம் வைத்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் கூட்டணியான மகா விகாஸ் அகாடி 42 இடங்களில் வெற்றி, 7 இடங்களில் முன்னிலை என மொத்தம் 49 இடங்களை தன் வசம் வைத்துள்ளது. சில தொகுதிகளில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்துவருகிறது.
இதன் மூலம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்ற உள்ளது. இதனால், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு, குறிப்பாக மாநிலத்தின் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு, என்.டி.ஏ-வுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியதற்காக மனமார்ந்த நன்றி. இந்த பாசமும் அரவணைப்பும் இணையற்றது.
மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக எங்கள் கூட்டணி தொடர்ந்து உழைக்கும் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார்.

