கிரீஸ் நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இதுவரை 36 பேர் பலி, 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். லரிசா என்ற நகரத்தில் வந்துக் கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதியுள்ளது. விபத்தின் கோரம் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவுமில்லை. விபத்து நடந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாதவர்கள் விபத்து குறித்து கூறும்போது, “விபத்து நடந்தபோது ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் திடீரென வெடித்து சிதறியது, அதன்பிறகு இடிபாடுகளில் சிக்கிக்கொண்டோம்” என தெரிவித்தனர்.