அமெரிக்க அதிபர்களுக்காக கடந்த 40 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த புகழ்பெற்ற ஏர்போர்ஸ் ஒன் போயிங் 747-200B விமானம் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகிறது.முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் முதல் பல அமெரிக்க அதிபர்கள் இந்த விமானத்தை பயன்படுத்தியுள்ளனர். அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் செயல்பட்ட இந்த விமானத்தின் கடைசி பயணமாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்து அமெரிக்கா திரும்பிய பயணம் அமைந்தது.கடைசி சேவையை முடித்த விமானம் தற்போது ஜாயிண்ட் பேஸ் ஆன்ட்ரூஸ் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க விமானத்தின் ஓய்வு அமெரிக்க விமானப் போக்குவரத்து வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. விரைவில் புதிய தலைமுறை ஏர்போர்ஸ் ஒன் விமானங்கள் சேவைக்கு வரவுள்ளன.

