மும்பையில் பிரபல நடிகர் சயிஃப் அலிகான் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்தார். இன்று, ஜனவரி 16ம் தேதி, வியாழக்கிழமை அதிகாலை, அவர் தனது பாந்த்ரா இல்லத்தில் கொள்ளை முயற்சியின் போது இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை 2:30 மணிக்கு, கொள்ளையடிக்க வந்த ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து, நடிகரை கத்தியால் தாக்கியுள்ளார். தற்போது, சயிஃப் அலிகான் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாந்த்ரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமான விசாரணையை ஆரம்பித்துள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் ஒரு தனிப்படை அமைத்துள்ளனர்.

