பிரதமர் மோடி நவி மும்பையின் கார்கர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி இஸ்கான் கோவிலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இது ஆசியாவின் இரண்டாவது பெரிய இஸ்கான் கோவில் ஆகும். இஷ்கானின் முயற்சியால் ஆன்மிகம் மற்றும் அறிவியல் சார்ந்த மண்ணில் இந்த கோவில் திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. கோவிலில் பல்வேறு கடவுள்களின் சிலைகள் உள்ளன, மேலும் இது நாட்டின் நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளுக்கான புனித மையமாக திகழும் என நம்புகிறேன் . இந்தக் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ஒடிஸா மாநிலங்களில் உள்ள பக்தர்களை இணைப்பது இதன் முக்கிய நோக்கமாகும். மஹாராஷ்டிரா மக்களுக்காக இந்த சிறப்பான பணிகளை மேற்கொண்ட இஸ்கான் நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்காக தொடர்ந்து சேவை செய்ய அரசு மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது. வீட்டுக்கு வீடு கழிப்பறை, ஏழைகளுக்கு காஸ் இணைப்பு, குடிநீர் வசதி, ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு போன்ற பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
