திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிப்பு.

அரசியல் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

பொன்முடி, திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் திருக்கோயிலூர் தொகுதியில் எம்எல்ஏவாகவும் வனத்துறை அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில், அவர் பெண்களுக்கு எதிராகவும், சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த வீடியோ ஒன்று வைரலாகி, அதனால் அவரது கட்சிப் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பொன்முடி திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரது அமைச்சர் பதவியும் பறிக்கபடுமா என்ற குழப்பம் கட்சி உள்ளே எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *