இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை வென்று 80வது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்வுகள் ரஷ்யாவில் வரும் மே 9ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பியுள்ளார். அழைப்பில் கூறியதாவது : மே மாதம் 9ம் தேதி நடைபெறும் வெற்றி விழா அணிவகுப்பில் இந்திய பிரதமரை மாஸ்கோ வரவேற்க எதிர்பார்த்துகொண்டிருகிறது என இருந்ததாகவும், மேலும் இதற்கான அழைப்பு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

