தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகளில் ஒன்றான ‘சஞ்சாரம்’ நாவலுக்கு 2018ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது எஸ்.ராமகிருஷ்ணன் வென்றார். மேலும் இவர் ஞானவாணி விருது, தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இன்று(ஏப்ரல்.10) இந்தியாவில் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருதையும் அத்துடன் சேர்த்து ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில், இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது.

