திருச்சூர் பூரம் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

ஆன்மீகம் கலை / கலாச்சாரம் சிறப்பு சுற்றுலா செய்திகள் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் பொழுதுபோக்கு

திருச்சூர் புரம் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. யானை தெற்கு வழியாக வந்து விழாவை ஆரம்பித்தது. இதனைப் பல லட்ச பக்தர்கள் பார்வையிடுகிறார்கள். இந்த விழா திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயிலில் நடைபெறுகிறது. இதில் பத்து கோவில்கள் கலந்து கொள்வது வழக்கம். திருச்சூர் பூரம் என்பது கேரளாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய கோயில் விழா ஆகும்.இந்த திருவிழா, மே மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்துடன் சந்திரன் உதிக்கும் நாளில் கொண்டாடப்படுகிறது. இது கொச்சியின் மகாராஜா சக்தன் தம்புரனின் வடக்குநாதன் கோயிலைச் சுற்றி உள்ள 10 கோயில்களை ஒருங்கிணைத்து திருச்சூர் பூரத்தை பொதுமக்கள் விழாவாக கொண்டாடபட வேண்டும் என அறிவித்தார். மேலும்,அலங்கரிக்கப்பட்ட யானைகள், இசை, நடனம் மற்றும் பிற கலாச்சார நிகழ்வுகளுடன், நடக்கும் பிரமாண்டமான விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், திருவிழாவில் பயன்படுத்தப்படும் குடைகள் மற்றும் நெட்டிப்பட்டம் என அனைத்தும் புதிதாக ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *