தமிழ் முருகன்; தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் புதிய திரைப்படம் அறிவிப்பு

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இசை இந்தியா கோயில்கள் சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் மம்மூட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் ‘தமிழ் முருகன்’ என்னும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷின் உந்தர் பார் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை வெற்றி மாறன் இயக்குகிறார். அறிவுமதி எழுத்தில் உருவாகும் தமிழ் முருகன் திரைப்படத்திற்கு சாய் அபபயங்கர் இசையமைக்கிறார்.
இது தொடர்பாக படக்குழு அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் முருகனை மையமாக வைத்து உருவாக உள்ள புதிய திரைப்படத்திற்கு தமிழ் நாட்டில் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Thamizh Murugan: Dhanush rides an elephant, wields a vel in striking first look

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *