உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் நீதி மன்றம்

உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். சஞ்சீவ் கன்னா நேற்றுடன் ஓய்வு பெற்ற பிறகு, புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றுள்ளார். சஞ்சீவ் கண்ணா 2024ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. பிரிவுபசார விழாவில் பேசிய சஞ்சீவ் கண்ணா, ‘ஓய்வுக்கு பிறகு வேறு எந்த பதவியையும் ஏற்கப்போவது இல்லை. சட்டம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவேன்’ என்றார். சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெற்ற பிறகு, இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாயை ஜனாதிபதி முர்மு ஏப்.29 அன்று நியமித்தார். இன்று, பி.ஆர். கவாய் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதியின் குடும்பத்தினர் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *