கூகுள் தனது லோகோவில் சிறிய மாற்றங்களை செய்துள்ளது.

அமெரிக்கா அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா உலகம் கண்டுபிடிப்பு சிறப்பு செய்திகள்

கூகுள் நிறுவனம் தனது லோகோவில் ஒரு புதிய மாற்றத்தை செய்துள்ளது. பழைய லோகோவில் காணப்பட்ட சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீல நிறங்கள் தனித்தனியாக இருந்தன. தற்போது, இந்த நான்கு நிறங்களும் ஒன்றாக இணைந்து ஒரு புதிய வடிவத்தில் காணப்படுகின்றன. உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனங்களில் ஒன்றாகக் விளங்கும் கூகுள், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது லோகோவில் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. பழைய வடிவத்தில், நிறங்கள் சின்ன சின்ன பெட்டிகளாகவே இருந்தன, ஆனால் இப்போது, அவை ஒன்றாக ஒட்டி இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை அறிமுகப்படுத்துவதால், புதிய லோகோ உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.. இந்த புதிய லோகோ, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் விரைவில் இந்த மாற்றம் காணப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *