தமிழில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்; பாராட்டிய தெலுங்கு இயக்குநர்

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி

டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தை தெலுங்கு இயக்குநர் ராஜமவுலி பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் ராஜமவுலி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டூரிஸ்ட் ஃபேமிலி என்ற அதி சிறப்பான திரைப்படத்தை பார்த்தேன். மனதை தொடும் அதே சமயம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை. படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்திய படம். சிறப்பாக எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். சமீபகாலத்தில் எனக்கு கிட்டிய சிறந்த சினிமா அனுபவம் இந்தப் படம். தவறவிடாதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் ஒருவரை இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ராஜமவுலி பாராட்டியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதே சமயம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநரான அபிஷன் ஜீவிந்த் நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தான் ஒருமுறை ‘பெரிய ராஜமவுலியா’ என சிலரால் கிண்டல் செய்யப்பட்டது குறித்து பேசியிருந்தார். தற்போது ராஜமவுலி வாயால் பாராட்டை பெற்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. 3வது வாரமாக இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.7 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *