உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா, ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று 2 நாட்கள் அரசு விழாவாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அக்.31 மற்றும் நவ. 1 அன்று ராஜ ராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு, அரண்மனை வளாகத்திலிருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. மேலும் பெரிய கோவில் வளாகத்தில் 400 பரதநாட்டிய கலைஞர்கள் பரதம் ஆடி மக்களை கவர்ந்தனர். மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மற்றும் பல்வேறு கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ஓதுவா மூர்த்திகள் திருமுறை பண்ணுடன் ராஜ வீதிகளில் திருவீதியுலா நடைபெற்றது. இதையைடுத்து பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெறும்.
சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

