வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு உரிமை: சீமான் எதிர்ப்பு.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நிறைவு பெற்ற நிலையில், வடமாநிலத்திலிருந்து வெளியேறியுள்ள, 36 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம், அவர்கள் வேலைக்காகக் குடியேறியுள்ள மாநிலங்களிலேயே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் எனவும் அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது புலம் பெயர்ந்த, 36 லட்சம் பேரில், 7 லட்சம் பேர் தமிழகத்தில் குடியேறியுள்ள நிலையில், விரைவில் அவர்கள், தமிழக வாக்காளர்களாக ஓட்டுரிமை பெறவுள்ளனர். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மெதுவாக இந்தியை திணித்து இந்தி பேசும் மாநிலமாக அபகரித்து வருகிறார்கள். தற்போது, வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுத்துவிட்டால் அரசியலையும், அதிகாரத்தையும் அவன் தீர்மானித்து விடுவான். வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டுரிமை வழங்கக்கூடாது என சீமான் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *