ஈழ தமிழர்களை தவறாக சித்தரித்த தெலுங்கு திரைப்படமான ‘கிங்டம்’ தமிழ்நாட்டில் வெளியிட தடை போராட்டம்.

அரசியல் இந்தியா இலங்கை சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு

டைரக்டர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகின திரைப்படம் கிங்டம். இத்திரைப்படம் கடந்த 31ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. இப்படத்தில் ஈழ தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் கடவுளான முருகன் பெயரை வில்லனுக்கு சூட்டி இருப்பதாகவும் நாதவினர் குற்றச்சாட்டி உள்ளனர். இதனால் கிங்டம் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தி தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழகம் முழுவதும் ஈழ தமிழர்களை தவறாக சித்தரித்த திரைப்படமான ‘கிங்டம்’ படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை போராட்டம் மற்றும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அரசியல் தலைவர்களும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *