நுண்ணறிவு(AI) பயன்பாட்டால் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவு .

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகம் கண்டுபிடிப்பு சிறப்பு செய்திகள்

செயற்கை நுண்ணறிவு தளங்களை பயன்படுத்துபவர்களின் மூளையின் சிந்திக்கும் திறன் 47% குறைந்துவிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகமான Massachusetts Institute of Technology, செயற்கை நுண்ணறிவு தளம் ChatGPT-ஐ பயன்படுத்துபவர்களின் மூளையை ஆராய்ந்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது.இதில் ChatGPT-ஐ பயன்படுத்துபவர்களின் மூளையின் சிந்திக்கும் திறன் 47% குறைந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, சில நிமிடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு வாக்கியத்தை பலருக்கும் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றும், அதே நேரத்தில் AI-ஐ பயன்படுத்தாமல் எழுதியவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *