மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2- ஆவது மாநில மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டுக்காக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் 1.50 லட்சம் பேர் அமர்வதற்கான இருக்கைகள், 4 வாகன நிறுத்தும் இடங்கள், 200 அடி நீளத்துக்கு பிரம்மாண்ட மேடை, 800 அடி நீளத்துக்கு ரேம்ப் வால்க் மேடை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாநாடு துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே அரங்கம் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. 3.30 மணிக்கு மேல் விழா மேடைக்கு வந்த விஜய் உள்ளே நுழைந்ததும், ‘உங்கள் விஜய்’ பாடல் ஒலித்தது. அந்த பாடலை விஜய் தன் குரலில் பாடியிருந்தார். தொடர்ந்து மேடையில் இருந்து இறங்கி மக்கள் மத்தியில் ராம்ப் வாக் சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய பின்னர், கொள்கை தலைவர்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பின் விஜய் பேச தொடங்கினார். 2 ஆவது மாநில மாநாடு ’வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்ற பேர்ல நடத்துறோம். அதுக்கு காரணம் இருக்கு. கடந்த காலங்களை போலவே இப்போதும் நடக்க போகுது.ஆனால் உங்கள் ஆதரவுதான் எனக்கு கிடைக்கப்போற ஓட்டா.. மக்கள் விரோத சக்திக்கு எதிரான வேட்டா.. நம்மள கோட்டைக்கு கூட்டிட்டு போற ரூட்டா… மாறப்போகுது. அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி இல்லங்க நம்ம கட்சி. கொள்கைக்காக துவங்கப்பட்ட கட்சி. கொள்கை கோட்பாடுகளோடு நமது கொள்கை தலைவர்களுடைய வழிகாட்டுதலோடு துவங்கப்பட்ட கட்சி. நமது ஒரே கொள்கை எதிரி பாஜகதான். ஒரே அரசியல் எதிரி திமுக தான். வருகிற 2026 -ல் 2 கட்சிகளுக்கு இடையே போட்டி நடைபெறும், ஒன்று TVK மற்றும் இன்னொன்று Dmk என்று கூறினார். Stalin Uncle, இது மிகவும் தவறானது, அண்ணே. நீங்கள் நடத்தும் ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், பணியாளர்கள், சுற்றுச்சூழல் ஆகியோருக்கு எதற்காவது பாதுகாப்பு இருக்கிறதா? சொல்லுங்கள் அண்ணே.. உங்கள் ஆட்சியை பார்த்து வாயே இல்லாத ஊரும் வயிறு வலிக்க சிரிக்கிறது. மக்களே, நீங்கள் சொல்லுங்கள்.. ஆட்சிக்கு வந்தால் செய்வோம், செய்வோம் என்று கூறினார்களே, செய்தார்களா!? சொல்லுங்கள்” என்று கேள்வி எழுப்பினார். தைரியமாக இருங்கள், நல்லது நடக்கும்” என கூறி முடித்தார்.

