துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தங்களது வேட்பாளராக மராட்டிய மாநில கவர்னரான கோவையை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்தது. இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பி.சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 781 வாக்குகளில் 767 வாக்குகள் பதிவான நிலையில் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் சி.பி.ராதாகிருஷணன், இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை துணை ஜனாதிபதியாக தனது பதவியை ஏற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில், அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

