செப்டம்பர் 27, 2024 அன்று அசாமின் ஜிலி ஆற்றங்கரையில் இரண்டாம் உலகப் போரின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குண்டு 182 கிலோ எடையுடையது மற்றும் இது செயலில் உள்ள வெடி குண்டு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் , கண்டுபிடிக்கப்பட்ட வெடி குண்டை செயலிழக்கச் செய்யும் பணியில் விமானப்படை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்காக, லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள தாலுங் ரிசர்வ் வனப்பகுதியில் வெடிகுண்டு கொண்டு செல்லப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குண்டு செயலிழக்கச் செய்யும் இடத்திலிருந்து 3.5 கி.மீ தொலைவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், வனவிலங்குகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், வெடிகுண்டு வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டது. எந்த பிரச்சனையும் இல்லாமல் வெடிகுண்டு வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக விமானப்படை அதிகாரி தெரிவித்தார்.
