பங்களாதேஷ் தலைநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீவிபத்து

உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விபத்துகள்

வங்கதேசம் தலைநகர் டக்காவில் அமைந்துள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சேமித்து வைக்கும் சரக்கு முனையத்தில் தீ பிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து விமான நிலைய தீயணைப்புத் துறை, பங்களாதேஷ் விமானப்படை தீயணைப்புப் பிரிவு உள்ளிட்டோர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து காரணமாக விமான நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாக இயக்குனர் SM ரகிப் சமத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. மேலும் விமான நிலைய அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையில் ஈட்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *