தென் கொரியாவில்,’ பெண்மையின் வாழ்வு வசந்தின் பேரழகு ‘ என்ற கருப்பொருளில் மகளிர் தினக் கொண்டாட்டம், தேஜியோன் மாநகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும், செல்வி. ஸ்ரீ. ரெங்கநாயகி வரவேற்றார். வரவேற்பின் அடையாளமாக ஒவ்வொருவருக்கும், ஊக்கமளிக்கும் பொன்மொழிகள் தாங்கிய ‘ உலர்ந்த தாவரத் தொகுப்பு ‘ வழங்கப்பட்டது. கொரிய தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர், திருமதி. விஜயலட்சுமி பத்மநாபன் தலைமை உரை ஆற்ற, முனைவர். பூங்கவிதை குணசேகரன் வழி காட்டுதலில் நடைபெற்ற நடனப் பயிற்சி, பெண்களின் பெண்களின் உள்ளத்தில் புதைந்திருந்த நீண்ட காலத் தயக்க கூடுகளை உடைத்தெறிந்தது. கொரிய தமிழ்ச் சங்கத்தின் இளம் பெண்கள், அகிலா கதிரேசன், ஸ்ரீ ரெங்கநாயகி, அபர்ணா அரவிந்த் ராஜா, மதுமிதா ஆனந்த், முனைவர். சரஸ்வதி ஆகியோர் பெண்களின் வளர்ச்சியை வலியுறுத்தும் தங்களின் அசத்தலான நடனத்தால் மகிழ்வித்தனர்.’ கொடுக்கவே பெறுதல் ‘ என்ற நிகழ்வில், மதுமிதா ஆனந்த் நூல்களால் கோலங்கள் தீட்டும் கைவினைக் கலைகளையும், சுமித்ரா விக்னேஷ்ராம் சாதாரண குக்கீஸ்களை கலை நயத்துடன் அலங்கரிக்கும் வித்தையை அனைவருக்கும் கற்றுத்தந்தார்.
இந்த, மகளிர் தின விழாவை மறக்க முடியாத நிகழ்வாக, கூட்ட அரங்கினை கட்டணமின்றி தந்த முனைவர். பாலமுருகன், பதிவுப் படிவத்தை நுணுக்கமாக வடிவமைத்த ஸ்ரீ ரெங்கநாயகி, நிதியாதாரம் திரட்டிய ஜெனட் ஜெரோம் மற்றும் ஜிஎம்இ, சக்ரா, சரவண பவன், கரூர். சிவசாந்தி பார்ம்ஸ் ஆகியோரின் உறுதியான ஆதரவோடு சிறப்பாக நடை பெற்றது.ஜிஎம்இ. நிறுவன நிர்வாகத் தலைவர். ரியாஸ் வக்காஸ் பெண்களின் பொருளாதர சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், ரேஷ்மி நாயர் ஜிஎம்இ நிறுவனத்தின் சேவைகள் நோக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழாவினைத் தொகுத்து வழங்கிய விஜயலட்சுமி பத்மநாபன், பூங்கவிதை, ஜெயஸ்ரீ பத்மநாபன், விழாவின் அழகான தருணங்களை ஒளிப்பபடங்களாகப் பதிவு செய்த வைஷ்ணவி நரசிம்மன், அபர்ணா அரவிந்த் ராஜா, தொழில் நுட்ப உதவி வழங்கிய விபின் ஜியோ, விளம்பர பிரசுரத்தை வடிவமைத்த கிருபா சிவசுப்ரமணியம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக இவ்விழாவினைக் கொண்டு சேர்த்த பிரியா பெரியசாமி அனைவரின் கூட்டு முயற்சியோடு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

