உலகிலேயே முதன்முறையாக இரட்டை அலைவரிசை ரேடாரை உருவாக்கியது நிசார்.

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்திய வணிகம் இந்தியா உலகம் கண்டுபிடிப்பு சிறப்பு செய்திகள் விண்வெளி சார்ந்தவை

உலகம் இதுவரை பார்த்திடாத தொழில்நுட்பங்களுடன் இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கியுள்ள நிசார் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. 11 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயற்கை கோளை வின்ஞானிகள், காலநிலை வல்லுநர்கள், பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். இஸ்ரோ – நாசா செயற்கைத்துளை ரேடார் என்பதின் சுருக்கமே நிசார். இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கியுள்ள உலகின் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைகோள் இது. ரூ.11294 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் 2392 கிலோ எடை கொண்டது. புவி தாழ்வட்டப் பாதை செயற்கை கோளான நிசார். பூமியிலிருந்து 747 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்படும் 97 நிமிடங்களில் புவியை ஒருமுறை சுற்றி ஒரு நாளில் 14 முறை வளம் வந்துவிடும். புவியை அங்குலம் அங்குலமாக ஆய்ந்து இயற்கை வளங்கள் முதல் கடற்கரை கண்காணிப்பு வரை தரவுகளை ஒவ்வொரு 12 நாட்களுக்கும் துல்லிய வரைபடங்களாக அனுப்பும் பொதுவாக செயற்கைகோள்கள் ஒற்றை வரிசை ரேடார்களுடனே ஏவப்படும். ஆனால் உலகிலேயே முதல்முறையாக நாசாவின் எல் பாண்ட், இஸ்ரோவின் எஸ் பாண்ட் என இரட்டை அலைவரியை ரேடார்களாக நிசார் உருவாக்கப்பட்டுள்ளது. மோசமான காலநிலையிலும் இரவிலும் கூட புவியின் மேற்பார்வை உயர்த்தெளிவு திறன் மற்றும் முப்பரிமாண காட்சிகளாக படமெடுக்க உதவும் சார்க் தொழில்நுட்பத்தை ரேடார்கள் பயன்படுத்துகின்றன. பாதுகாப்பு மண்ணின் ஈரத்தன்மை உள்ளிட்டவை குறித்த துல்லிய தரவுகளை S பேண்ட் வழங்குகிறது. நிலநடுக்கம் தாக்குவதற்கு முன்பே, புவியில் ஏற்படும் மில்லிமீட்டர் அளவிலான அதிர்வுகளை நிசார் செயற்கைகோள் துல்லியமாக கணிக்கிறது. காலநிலை மாற்றத்தால் உலகம் பல்வேறு இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு வரும்நிலையில், நிசார் அனுப்பும் தரவுகள் சூழ்நிலை மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களை பனிப்பாறை மாற்றங்கள், கடல்மட்ட உயர்வு, நிலத்தடி நீர் ஆதாரங்களின் அளவுகள் மட்டுமின்றி, சுனாமி, எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களையும் கணிக்க உதவுகிறது. இதற்கும் அப்பால், கடல் பனி, கப்பல்கள் கண்டறிதல், கடற்கரை கண்காணிப்பு, நீர் ஆதாரங்களை ஆவணப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளை இந்த செயற்கைகோள் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *