ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக 4-வது முறையாக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றுக்கொண்டார். ராஞ்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கங்வார் அவருக்கு பதவிப்பிரமாணம் வழங்கினார். கடந்த 13 மற்றும் 20ம் தேதிகளில், 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களில் நடைபெற்றது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களில், காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றி பெற்றது, மேலும் பாஜ கூட்டணி 24 இடங்களில் வெற்றிபெற்றது. இந்தியா கூட்டணிக்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைத்ததையடுத்து, ஹேமந்த் சோரன் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதற்கான முன்னெடுப்புகளாக, ராஞ்சியில் உள்ள மோர்ஹபதி மைதானத்தில் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் 4-வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். ராஞ்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ்குமார் கங்வார் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாடு அரசின் சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விழாவில் பங்கேற்றார். மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.