தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்த விஜய், தனது திரைவாழ்க்கையின் உச்சத்திலேயே அரசியலுக்கு வந்ததாக பல மேடைகளில் கூறி வந்தார். இந்த கூற்று அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தையும், எதிர்க்கட்சிகளிடையே விமர்சனத்தையும் உருவாக்கியது. தமிழ் சினிமாவில் உயர்ந்த புகழை பெற்ற பல நடிகர்களுக்கும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் முக்கியமானவர்கள். ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் புதிய மாற்றங்களை சந்தித்தது. முன்னதாக விஜயகாந்த் அரசியலில் நுழைந்து 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சியாக இருந்தாலும், விஜய் போல பெரிய வளர்ச்சி அவரது கட்சிக்கு கிடைக்கவில்லை. தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற சினிமா நட்சத்திரங்களுக்கு பிறகு, புதிய நடிகர் ஒருவர் பெரிய அளவில் எழுச்சி பெறவில்லை. ஆனால் 2026 தேர்தலில் முழுமையான பெரும்பான்மை பெறாத போதிலும், விஜய் தனித்துவமான அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார். ரஜினிகாந்தின் அரசியல் பயணம்1990-களிலிருந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 1996 தேர்தலில் அவர் தெரிவித்த கருத்துக்கள் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆனால், பல ஆண்டுகள் கழித்தும் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபடவில்லை. 2017ல் அரசியலுக்கு வருவதாக அறிவித்தாலும், பின்னர் அந்த முடிவை கைவிட்டார். இதனால் அவரது அரசியல் பயணம் தொடங்குவதற்குள் முடிந்தது.
கமல்ஹாசனின் அரசியல் முயற்சி கமலஹாசன் 2018ல் “மக்கள் நீதி மையம்” கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். ஆனால் 2019 மற்றும் 2021 தேர்தல்களில் பெரிய வெற்றி பெறவில்லை. பின்னர் கூட்டணிகளுக்கு ஆதரவு அளித்து அரசியல் பயணத்தை தொடர்ந்தார். விஜயின் வித்தியாசம் ரஜினி, கமல் ஆகியோரிடம் இல்லாத சில அம்சங்கள் விஜயிடம் உள்ளன என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சரியான நேரத்தில் அரசியலுக்கு வந்தது, ரசிகர் அடிப்படை வலிமை, நிதி மற்றும் அமைப்பு திறன் ஆகியவை விஜயின் பலமாக பார்க்கப்படுகின்றன. சினிமாவில் கிடைத்த புகழை அரசியல் ஆதரவாக மாற்றியுள்ளார் விஜய். ஆனால், அவரின் எதிர்காலம் தேர்தல் வெற்றியால் மட்டும் முடிவாகாது. கட்சியை வலுவாக அமைப்பது மற்றும் நல்ல நிர்வாகத்தை வழங்குவது முக்கியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இளைஞர்களின் ஆதரவு இன்றைய இளைஞர்கள் விஜயை ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது. மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் பலவீனமாக இருந்த சூழலில், புதிய தலைமுறை விஜயை தேர்வு செய்துள்ளது. இதை “தமிழ்நாட்டின் ஜென் ஸி தருணம்” என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மொத்தத்தில், விஜய் அரசியலில் பெற்றிருக்கும் இந்த முன்னேற்றம், சரியான நேரம், மக்கள் ஆதரவு மற்றும் திட்டமிட்ட அணுகுமுறை ஆகியவற்றின் கூட்டுத்தொகையாக பார்க்கப்படுகிறது.

