சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். திட்டமிட்டப்படி சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்த அக்குழு, மொத்தம் 433 மணி நேரத்தை விண்வெளியில் செலவிட்ட நிலையில், தங்கள் பயணத்தை நிறைவுசெய்து பூமியை நோக்கி டிராகன் விண்கலம் வாயிலாக நேற்று மீண்டும் புறப்பட்டனர். டிராகன் விண்கலம் பத்திரமாக 22 மணி நேர பயணத்திற்குபின், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் இன்று மாலை 3:01 மணிக்கு, ‘ஸ்ப்லாஷ் டவ்ன்’ முறையில் தரையிறங்கியது. தொடர்ந்து, 22 மணி நேர பயணத்திற்குப் பிறகு, அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் இன்று மாலை 3:01 மணிக்கு, ‘ஸ்ப்லாஷ் டவ்ன்’ முறையில் டிராகன் விண்கலம் தரையிறங்கியது.கடலில் இறங்கிய விண்கலம், கப்பலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, அதன் கதவை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறக்கப்பட்டன. முதலாவதாக நாசாவின் பெக்கி விட்சன் வெளியே அழைத்து வரப்பட்டார்.

