கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி.சதீஷன் தேர்வாகியுள்ளார்; மே 18ல் பதவியேற்பு

அரசியல் இந்தியா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

கேரள சட்டமன்ற தேர்தல் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை பெற்றுள்ளது. ஆனால் அக்கட்சியில் யார் முதலமைச்சராக பதவியேற்பது என்கிற குழப்பம் நிலவி வந்தது.
முதலமைச்சராக பதவிக்கான ரேசில் காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் கே.சி வேணுகோபால், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் தேர்தல் முடிவுகள் வந்தும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க முடியவில்லை.
அதன் படி தற்போது காங்கிரஸ் கட்சி, கேரள மாநிலத்தின் முதலமைச்சராக வி.டி.சதீஷன்-ஐ அறிவித்ததுள்ளது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அவரது ஆதரவளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யார் இந்த வி.டி. சதீசன்…?
1964 ஆம் ஆண்டு கொச்சிக்கு அருகிலுள்ள நெட்டூரில் பிறந்தார் சதீசன். வழக்கறிஞரான இவர் கேரள மாணவர் சங்கம் (KSU) வாயிலாகப் பொதுவாழ்வில் நுழைந்தார். பின்னர் இளைஞர் காங்கிரஸில் இணைந்து படிப்படியாக அரசியலில் உயர்ந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் பரவூர் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.
கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2021 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பரவூர் தொகுதியிலிருந்து போட்டியிட்ட சதீசன் 20,600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம் பல்வேறு பேச்சுவார்த்தைகளும் ஆலோசனை கூட்டங்களும் நடத்தியது. மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து கருத்து கேட்கப்பட்டது.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளத்தின் முதலமைச்சராக யார் பதவியேற்பார் என இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *