இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுகுறித்து, இந்திய அரசின் தேசிய நில அதிர்வு ஆய்வகம் (National Center for Seismology) தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக ஊடக வலைதளத்தில், பிற்பகல் 12.31 மணியளவில் இலங்கையின் தலைநகர் கொழும்புவிலிருந்து தென்கிழக்கே 1,326 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.2 ஆக பதிவாகியதாக தெரிவித்தது.
