ரஷ்யா-உக்ரைன் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நடந்த கடும் மோதலில், ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.இதற்கு பதிலடியாக உக்ரைன் சுமார் 400 டிரோன்களை ஏவி ரஷ்யாவின் பல பகுதிகளை தாக்கியது. இந்த தாக்குதலில் மாஸ்கோவில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், எண்ணெய் சேமிப்பு நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.இதையடுத்து ரஷ்யா க்ரூஸ் ஏவுகணைகள் மூலம் உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தை தாக்கியது. அப்போது துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற எம்வி கோல்டன் லியோ என்ற சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்கியது. இதில் கப்பல் தீப்பிடித்து கடுமையாக சேதமடைந்தது.இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. கப்பல் பைலட் உட்பட மொத்தம் 10 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

