துபாரே யானைகள் முகாமில் சென்னை பெண் உயிரிழப்புக்கு காரணமான யானை உயிரிழப்பு.

இந்தியா செய்திகள் மறைவு/இரங்கல் முதன்மை செய்தி விபத்துகள்

கர்நாடக மாநிலம் குடகில் உள்ள துபாரே யானைகள் முகாமில் இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் சண்டை பரபரப்பை ஏற்படுத்தியது. மார்த்தாண்டா மற்றும் கஞ்சன் என்ற யானைகள் மோதிக்கொண்டதில் இரண்டுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.இந்த சண்டையின்போது கஞ்சன் யானை தாக்கியதில் 53 வயதான மார்த்தாண்டா யானை கடுமையாக காயமடைந்தது. மேலும், பாறைகளுக்கு இடையில் விழுந்ததால் அதன் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக வனத்துறை அதிகாரிகள் யானையை மீட்டு மடிக்கேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மார்த்தாண்டா யானை உயிரிழந்தது.4500 கிலோ எடை கொண்ட மார்த்தாண்டா யானை, 2014ஆம் ஆண்டு ஹாசன் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த யானை மைசூரு தசரா ஊர்வலத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவத்தின் போது, யானைகளுக்கு இடையே சிக்கிய சென்னை சேர்ந்த சுற்றுலா பயணி ஜாய்சி (33) பலத்த காயமடைந்து உயிரிழந்தார். அப்போது அவரது கணவர் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு மனைவியை காப்பாற்ற போராடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *