தமிழ்நாடு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – 94.31% மாணவர்கள் தேர்ச்சி!

உயர்கல்வி கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வு கடந்த மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் சேர்த்து சுமார் 8.7 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர்.இந்த ஆண்டு மொத்தமாக 94.31 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர்கள் 96.47 சதவீத தேர்ச்சியுடன் முன்னிலையில் உள்ளனர். மாணவர்கள் 92.15 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.51 சதவீதம் அதிகரித்துள்ளது.மாநிலம் முழுவதும் 12,467 பள்ளி மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்றனர். இதில் 5,171 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. மேலும் 8,233 பள்ளிகள் 95 சதவீதத்திற்கும் அதிகமான தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளிலும் இந்த ஆண்டு சிறப்பான தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.பள்ளி வகைப்பாட்டின்படி தனியார் சுயநிதி பள்ளிகள் 98.14 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளன. அரசு பள்ளிகள் 91.86 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. பெண்கள் பள்ளிகள், ஆண்கள் பள்ளிகளை விட அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன.மாவட்ட வாரியாக பார்க்கும்போது புதுக்கோட்டை மாவட்டம் 97.57 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *