அமெரிக்காவில் அதிர்ச்சி! புளூ ஆரிஜன் ராக்கெட் சோதனையில் வெடித்து சிதறியது

அமெரிக்கா அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி விண்வெளி சார்ந்தவை

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஜெப் பெசோஸ் நிறுவிய புளூ ஆரிஜின் நிறுவனம், அதிநவீன விண்வெளி தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சக்திவாய்ந்த கனரக ராக்கெட்டான “நியூ கிளென்” ராக்கெட் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஏவுதளத்தில் சோதனை ஓட்டத்தின் போது திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நேரடி ஒளிபரப்பின் போது ராக்கெட் திடீரென தீப்பற்றி, நெருப்புப் பந்தாக வெடித்து சிதறும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்து விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து புளூ ஆரிஜின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஹாட்-பயர் சோதனையின் போது எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், ஏவுதளத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விபத்திற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஜெப் பெசோஸ், விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய இன்னும் சில காலம் தேவைப்படும் என்றும், இது கடினமான சூழ்நிலை என்றாலும் மீண்டும் கட்டியெழுப்பி வெற்றிகரமாக பறக்கச் செய்வோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *