60 ஆண்டுகால நேருவின் சாதனையை முறியடிக்கும் மோடி! இந்திய அரசியலில் புதிய வரலாறுஇந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26 அன்று முதல் முறையாக பதவியேற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி வகித்து வரும் அவர், வரும் ஜூன் 10 ஆம் தேதி 4,399 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்த சாதனையை எட்ட உள்ளார்.இதன் மூலம், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நீண்டகால சாதனையை மோடி முறியடிக்கிறார். நேரு 1952 மே 13 முதல் 1964 மே 27 வரை, மொத்தம் 4,398 நாட்கள் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்திருந்தார். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருந்த இந்த சாதனை தற்போது மோடியால் முறியடிக்கப்பட உள்ளது.இதற்கு முன்பே, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தொடர்ச்சியான பிரதமர் பதவிக் கால சாதனையையும் மோடி கடந்திருந்தார். இந்திரா காந்தி 1966 முதல் 1977 வரை தொடர்ந்து 4,077 நாட்கள் பிரதமராக பணியாற்றியிருந்தார்.மேலும், குஜராத் முதலமைச்சர் மற்றும் இந்திய பிரதமர் என மோடியின் மொத்த பதவிக் காலம் இந்த ஆண்டு தொடக்கத்தில் 8,930 நாட்களை கடந்தது. இதன் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத் தலைவராக இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.வரும் ஜூன் 10 ஆம் தேதி, 4,399 நாட்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டும் மோடி, இந்திய ஜனநாயக வரலாற்றில் தொடர்ந்து மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற புதிய சாதனையை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய உள்ளார்.

