2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசத்தை அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிப்பு; இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறும் கால அவகாசத்தை அக்டோபர் 7ம் தேதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.
முன்னதாக, கடந்த மே மாதம் 19ம் தேதி, ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ” 2000 ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், 2000 ரூபாய் நோட்டுகள் பரிவர்த்தனைகளுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்றும், பொதுமக்களின் பணப்புழக்கத் தேவையைப் பூர்த்தி செய்ய மற்ற மதிப்புகளில் உள்ள ரூபாய் நோட்டுகளின் கையிருப்பு தொடர்ந்து போதுமானதாக உள்ளது என்றும் கூறி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்வதாக அறிவித்தது.
மேலும், பொதுமக்களுக்கு போதுமான அவகாசம் வழங்கும் வகையில், அனைத்து வங்கிகளும் 2023 செப்டம்பர் 30 வரை ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் அல்லது மற்ற நோட்டுகளாக மாற்றும் வசதியை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தது. ஆர்பிஐ-ன் இந்த அதிரடி அறிவிப்பு காரணமாக, 2023 மே 19 அன்று 3.56 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், 2023 செப்டம்பர் 29 அன்று வரை 3.42 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள், அதாவது 96% 2,000 ரூபாய் நோட்டுகள் இதுவரை திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது, வெறும் ₹0.14லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறும் கால அவகாசத்தை அக்டோபர் 7ம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *