அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

செய்திகள்

அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்: ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள்!தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ள அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் வரும் பொங்கல் தினம் முதல் தொடங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும்.3 காஸ் சிலிண்டர்களுக்கான தொகையையும் அரசு நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் சமையல் எரிவாயு செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *