ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதே போல், விபத்து ஒடிசா மாநிலத்திலும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நவின் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதல்வரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார்.

