சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செய்திகளை வேறு வழிகளில் பயன்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்ப்பது விதிகளுக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று செயல்படுபவர்கள் குறித்து புகார் அல்லது கடிதம் வந்தால், அது உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும். அதன்பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படுவதன் மூலம், அரசு மற்றும் அமைச்சரவை எவ்வாறு வெளிப்படையாக செயல்படுகின்றன என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும். அதேபோல், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன கருத்துகளை முன்வைக்கின்றனர் என்பதையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.சட்டப்பேரவை நேரலை தொடர்ந்து நடைபெறும் என்பதால், அனைத்து உறுப்பினர்களும் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

